மேலும் அறிய

CLAT 2026: சட்டப் படிப்பில் உங்கள் கனவை நனவாக்க கடைசி வாய்ப்பு! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

CLAT 2026 Registration: 2026ஆம் ஆண்டுக்கான கிளாட் தேர்வு டிசம்பர் 7, 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

கிளாட் எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (NLUs) பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) பதிவுச் செயல்முறையை விரைவில் நிறைவு செய்ய உள்ளது. சட்டம் பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 31, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளமான consortiumofnlus.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கிளாட் தேர்வு; ஓர் அறிமுகம்

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் ஒரு ஆண்டு எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் One year Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டுக்கான கிளாட் தேர்வு டிசம்பர் 7, 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) கிளாட் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க, அவகாசம் தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

CLAT 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டெப் 1. consortiumofnlus.ac.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2. முகப்புப் பக்கத்தில் "CLAT 2026 பதிவு" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3. உங்கள் மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பதிவுசெய்து, உங்கள் தனிப்பட்ட, கல்வி மற்றும் வகைத் தகவல்களை நிரப்பவும்.
ஸ்டெப் 4. உங்கள் புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
ஸ்டெப் 5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
ஸ்டெப் 6. படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்காலக் குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

தேர்வு முறை

இளங்கலை கிளாட் தேர்வில் 120 எம்சிக்யூ தேர்வு கேள்விகள் (MCQs) பின்வரும் பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்:
• ஆங்கில மொழி
• நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு
• சட்டப் பகுத்தறிவு
• தர்க்கப் பகுத்தறிவு
• அளவுசார் நுட்பங்கள்

கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

இ - மெயில் முகவரி : clat@consortiumofnlus.ac.in
தொலைபேசி எண்: 08047162020

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
விலைவாசி உயர்வால் திணறும் மக்கள்! தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வால் திணறும் மக்கள்! தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
Embed widget