மேலும் அறிய

CBSE Result 2025: வெளியானது தகவல்; சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? பார்ப்பது இப்படித்தான்!

CBSE Result 2025 Date: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

2025ஆம் ஆண்டுக்கான 10, பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்துடன் தொடங்கியது. காலை 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடந்தது. அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோருக்கான தாளுடன் முதல் தேர்வு தொடங்கியது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி வரையும் நடைபெற்றன.

தேர்வு முடிவுகள் எப்போது?

பொதுவாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒரே நேரத்தில் வெளியிடும். 2025ஆம் ஆண்டுக்கான 10, பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மே 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/  என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இணையத்தில் காண்பது எப்படி?

  • CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ போர்ட்டலான results.cbse.nic.in-க்குச் செல்லவும்
  • "CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025" அல்லது "CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025" என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் திரையில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
  • உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கி சேமித்து, வைத்துக் கொள்ளலாம்.

மேலும் டிஜி லாக்கர் செயலி, குறுஞ்செய்தி ஆகியவை மூலமும் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காண முடியும். 

கடந்த ஆண்டு எப்படி?

2024ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. அப்போது 12ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 87.98 ஆகவும் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி வீதம் 93.6 ஆகவும் இருந்தன. அதேபோல 2023-ல் மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு:  cbse.gov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
Embed widget