மேலும் அறிய

CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!

CBSE Class 12 Re Evaluation: பிளஸ் 2 மறுமதிப்பீடு ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 7) கடைசித் தேதி ஆகும். 

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி அன்று வெளியாகின. இந்த முறை முதல் தடவையாக ஓஎஸ்எம் எனப்படும் டிஜிட்டல் மதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தாங்கள் எழுதிய தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை, விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடிகள் நடந்துள்ளன என்று புகார்க் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் மதிப்பெண்ணில் சிக்கல் என கருதும் மாணவர்களுக்காக, விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பை சிபிஎஸ்இ வழங்கியிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி, ஏற்கனவே மதிப்பெண் சரிபார்ப்பு செய்து, தங்களின் விடைத்தாள் நகலை முறைப்படி பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

கட்டணம் எவ்வளவு?

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு கேள்விக்கும் தலா ரூ.100 வீதம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்க்கிங் மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். ஆஃப்லைன் அல்லது டி.டி. முறை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

எப்படி விண்ணப்பிப்பது?

மாணவர்கள் முதலில் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in அல்லது cbseit.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.

  1. முகப்புப் பக்கத்தில் உள்ள 'CBSE Class 12 Re-evaluation' அல்லது 'பரீக்‌ஷா சங்கம்' (Pariksha Sangam) என்ற பிரத்யேக இணைப்பைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  2. அடுத்துத் தோன்றும் புதிய திரையில், உங்களின் பதிவு எண் (Roll Number), பள்ளி எண் (School Number) மற்றும் தேர்வு மைய எண் (Center Number) ஆகிய விவரங்களைத் தவறாமல் உள்ளிடவும்.
  3. இப்போது நீங்கள் எந்தப் பாடத்தில், எந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மறுமதிப்பீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. கேள்விகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் கணக்கிடப்படும். அதனை ஆன்லைன் பேமெண்ட் கேட்வே மூலம் செலுத்தி, சப்மிட் பட்டனை அழுத்தவும்.
  5. வெற்றிகரமாக விண்ணப்பித்த பின்பு, விண்ணப்பப் படிவத்தை எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மாணவர்கள் மறந்துடாதீங்க..

மறுமதிப்பீட்டின் முடிவில் மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது போலவே, சில நேரங்களில் மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்புள்ளது. மறுமதிப்பீட்டிற்குப் பிறகு சிபிஎஸ்இ அறிவிக்கும் மதிப்பெண்ணே இறுதியானது. மதிப்பெண் குறைந்தால் பழைய மதிப்பெண்ணை வழங்கக் கோர முடியாது. மேலும், இதற்குப் பிறகு மதிப்பெண்கள் தொடர்பாக எந்தவொரு மேல்முறையீடும் செய்ய முடியாது.

இதுவரை 70 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. எனினும் விண்ணப்ப சாளரம் திறக்கப்பட்ட பிறகு லட்சக்கணக்கில் சைபர் அட்டாக்குகள் சரமாரியாக நடந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget