மேலும் அறிய

CAT 2022: நாளை நடைபெறும் கேட் தேர்வு; தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்...

நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் பொது நுழைவுத் தேர்வு (CAT) நாளை நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் பொது நுழைவுத் தேர்வு (CAT) நாளை நடைபெற உள்ளது. 

கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. 

என்ன தகுதி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

முன்னதாக முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

கேட் 2022-க்கான அனுமதிச் சீட்டு அக்டோபர் 27 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


CAT 2022: நாளை நடைபெறும் கேட் தேர்வு; தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்...

CAT 2022 விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, iimcat.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்தனர். 


CAT 2022: நாளை நடைபெறும் கேட் தேர்வு; தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்...

3 கட்டங்களாகத் தேர்வு

பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

என்னென்ன ஆவணங்கள் கட்டாயம்?

அனுமதிச் சீட்டு

செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்று

சுய அறிவிப்பு படிவம்

PwD சான்றிதழ் (தேவைப்பட்டால்)

CAT தேர்வுக்கூடத்தில் அனுமதிக்கப்பட்ட பிற பொருட்கள்:

டிசைன்கள் இல்லாத தண்ணீர் பாட்டில் 

முகக்கவசம்

கை சுத்திகரிப்பான் (50 மிலி)

அடையாளச் சான்றாக எதை எடுத்துச் செல்லலாம்?

கல்லூரி அடையாள அட்டை

அலுவலக அடையாள அட்டை

ஓட்டுநர் உரிமம்

கடவுச்சீட்டு

பான் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

ஆதார் அட்டை

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
Embed widget