மேலும் அறிய

Paramedical Admission: நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 10 வரை நீட்டிப்பு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு இன்று (ஜூன் 28) கடைசி தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி., பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு இன்று (ஜூன் 28) கடைசி தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tnmedicalselection.org  என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

என்னென்ன படிப்புகள்?

துணை மருத்துவப் படிப்புகளில் நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம்.

மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம். 

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில்‌ உள்ள இடங்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மருத்துவ பல்கலைக்கழகத்தால்‌ அங்கீகாரம்‌ செய்யப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில்‌ உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில்‌ மருத்துவம்‌ சார்ந்த பட்டப் படிப்புகளில்‌ 2023-2024 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ சேர்வதற்காக விண்ணப்பிக்கலாம்‌.

சேர்க்கை செயல்முறை தொடர்பான தகவல்களை மாணவர்கள்‌ www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு... 

இணைய தளத்தினை அணுகமுடியாத விண்ணப்பதாரர்கள்‌ தங்களது பெற்றோர்‌ அல்லது பாதுகாவலருடன்‌ அனைத்து அசல்‌ சான்றிதழ்களையும்‌ எடுத்து கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவக்‌ கல்லூரி / தமிழ்நாடு அரசு பல்‌ மருத்துவக்‌ கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை
அணுகி இணையதள விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்யலாம்‌.

விண்ணப்பதாரர்கள்‌ இணைய தளத்திலுள்ள தகவல்‌ தொகுப்பேட்டினை தரவிறக்கம்‌ செய்து, பிரிண்ட் எடுத்து தங்களது பெற்றோர்‌ அல்லது பாதுகாவலருடன்‌ கவனமாகப்‌ படித்து, இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய தகவல்களையும்‌ சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி., பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு இன்று (ஜூன் 28) கடைசி தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

* மாணவர்கள் https://reg23.tnmedicalonline.co.in/pmc//MyCourse.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/18062023212208.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, கையேட்டை பதிவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும். 

* புதிதாக பதிவு செய்து, லாகின் செய்ய வேண்டும். 

* கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். 

* இணையதள விண்ணப்ப படிவத்தை ஏற்காத நிகழ்வில்‌ மறுபரிசீலனைக்கு எந்த ஒரு கடிதமோ / கோரிக்கையோ ஏற்றுக்‌கொள்ளப்பட மாட்டாது.

* அதேபோல முழுமையாகப்‌ பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்பப் படிவமும்‌ ஏற்றுக்கொள்ளப்படாது.

கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில்‌ ஏதேனும்‌ சந்தேகம்‌ ஏற்பட்டால்‌ தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1. 044-29862045
2. 044-29862046
3. 044-28363822
4. 044-28364822
5. 044-28365822
6. 044-28366822
7. 044-28367822
8. 044-28361674 

கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/18062023212208.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget