மேலும் அறிய

பெரியார் பல்கலை.யில் பி.டெக் படிப்பா? தனியாருடன் இணையத் துடிப்பது ஏன்? வீணாகும் மாணவர் எதிர்காலம்- அன்புமணி!

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்)  ஆகிய படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்துவதை  தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடைபெறுவதாகவும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்)  ஆகிய புதிய பாடப்பிரிவுகளை தொழிற்துறையினரின் ஆதரவுடன் தொடங்க முடிவு செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து தொழில் நிறுவனங்களின் விருப்பத்தைக் கோரியிருக்கிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பதா?

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்த  பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில், இந்தப் படிப்புகளை  நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பெரியார் பல்கலைக்கழகம் வீணடித்து விடக்கூடாது.

ஏற்கனவே,  2023-24ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தபோவதாக பெரியார் பல்கலைக்கழ்கம் கடந்த  இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போதே  இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று பா.ம.க. வினா எழுப்பியிருந்தது.

பாமகவின் வினாக்களுக்கு விடையளித்த தமிழக அரசு,  ’’தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப்படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது’’ என்று அறிவித்தது. மேலும் இந்தப் படிப்பை நிறுத்தும்படி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தாம் ஆணையிட்டிருப்பதாக சட்டப்பேரவையின் அன்றைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் படிப்பை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கைவிட்டது.

தனியாருடன் இணைந்து நடத்த துடிப்பது ஏன்?

அதன்பின் கல்விச் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், புதியப் படிப்புகளை தனியாருடன் இணைந்து நடத்த  பல்கலைக்கழகம் துடிப்பது ஏன்? இந்தப் படிப்பு நடைமுறைக்கு வந்தால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம்தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படும். இதை தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா?

படிப்பே செல்லாது

இவை அனைத்துக்கும்  மேலாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் அத்தகைய ஒப்புதல் எதையும் பெறாமல் தொழில்நுட்பப் படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் வழங்கினால் அந்தப் படிப்பு செல்லாது. லட்சக்கணக்கில் பணம் கட்டி அந்தப் படிப்பை படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்)  ஆகிய படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்துவதை  தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை வணிகமாக்குவதையும் தடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Embed widget