B.Ed Admission 2023: பி.எட். தொலைநிலை மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க நவம்பர் 6 கடைசி; எப்படி?
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம் பி.எட். படிப்பில் சேருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 6 கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவிபெறும் பி.எட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பி.எட்) படிப்புக்கு 2,040 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து தொலைநிலை கல்வி இயக்ககமும் பி.எட். படிப்புகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம் பி.எட். படிப்பில் சேருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 6 கடைசித் தேதி ஆகும்.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
* தொலைநிலை பி.எட். படிப்பில் சேர ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.டிஎட்.) முடித்திருக்க வேண்டும்.
* 2 ஆண்டுகள் முழுநேர ஆசிரியர் பணியில் இருந்திருக்க வேண்டும். நிரந்தர அல்லது தற்காலிகமாக, ஏதேனும் ஒரு தொடக்க, நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி இருக்க வேண்டும்.
* அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
* இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
* குறைந்தபட்சம் ஓர் இளங்கலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதில் ஓசி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும் பிசி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். அதேபோல எம்பிசி பிரிவினர் 43 சதவீத மதிப்பெண்களும் எஸ்சி / எஸ்டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
* கல்லூரி ஆசிரியர்கள் இதில் சேர்ந்து படிக்க முடியாது.
கட்டண விவரம்
முதலாம் ஆண்டு - ரூ.21,000
இரண்டாம் ஆண்டு - ரூ.21,000
இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய துறை சார்ந்து ஏதேனும் ஒரு விருப்பப் படிப்பைத் தேர்வு செய்யலாம். எனினும் பொருளாதாரம், வணிகவியல் சார்ந்து பட்டப் படிப்பை முடித்தவர்கள் அதை மட்டுமே விருப்பப் படிப்பாகத் தேர்வு செய்ய முடியும்.
எலக்டிவ் பாடங்கள்
1. சுற்றுச்சூழல் கல்வி
2. உடற்கல்வி
3. யோகா கல்வி
50 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஆங்கில வழியில் பாடங்கள் அமைந்திருக்கும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொடங்கி, அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தொலைநிலை பி.எட். படிப்பைப் படிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.b-u.ac.in/b_ed/prospectus_new.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பப் படிவத்தை https://cdn.b-u.ac.in/b_ed/application1820.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தொலைபேசி எண்கள்: 0422-2427742, 2422222
மேலும் தகவல்களுக்கு https://b-u.ac.in/ என்ற இணையதளத்தைக் காண வேண்டும்.
2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். முதலாமாண்டு படிப்புக்கு செப்டம்பர் 1ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.