மேலும் அறிய

Child Marriage: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு; உறுதிமொழி எடுத்த மாணவர்கள்: குழந்தை திருமணத்தை தடுக்க அரசின் புது உத்தி!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகள் இன்று குழந்தைத் திருமணத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். 

குழந்தைத் திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகளில் மாணவிகள் இன்று உறுதிமொழி எடுத்தனர். 

தமிழ்நாட்டைக் குழந்தைத்‌ திருமணம்‌ இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நாடு அறிவியல், மருத்துவம், தொழிலுநுட்பம் என எத்தனையோ துறைகளில் முன்னேறி வந்தாலும், இன்னொரு பக்கம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. 

வறுமை, குறைவான வருமானம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என உணர்வது, விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குழந்தை திருமணத்துக்கு முக்கியமாகக் கூறப்படுகின்றன. 

கொரோனா காலத்தில் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் 

இந்த நிலையில் கொரோனா காலத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குழந்தைகளின் திருமணங்கள் கணிசமாக அதிகரித்தன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவியர் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவியர் 45 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவியர் 417 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவியர் 2 பேருக்கும் என்று 511 பேருக்கு திருமணம் நடைபெற்றது. 

மேலும் பதிமூன்று வயதைக் கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு, புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டைக் குழந்தைத்‌ திருமணம்‌ இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். 

இன்று உறுதிமொழி

இதுகுறித்து அனைத்து மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா தமிழ்நாடு என்ற பெயரில் இன்று (16 அக்டோபர்‌ 2023) உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள், ’’எனது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ “குழந்தைத் திருமணம்‌” நடைபெறுவதாக தெரியவந்தால்‌ எதிராக அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுப்பேன்‌ எனவும்‌ எனது சுற்றுப்புறத்திலும்‌ சமூகத்திலும்‌ எந்தவொரு குழந்தைக்கும்‌ திருமணம்‌ நடைபெறாமல்‌ இருப்பதை உறுதி செய்வேன்‌ எனவும் மேலும்‌, எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர்‌; குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்‌ கொடுப்பேன் எனவும்‌ குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும்‌; தடையற்ற கல்விக்காகவும்‌ தொடர்ந்து செயல்படுவேன்‌ எனவும்‌ உளமார உறுதி அளிக்கிறேன்’’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகங்கை சிறுவர்களுக்கு கலைத்திறன் போட்டி: குரலிசை, நடனம், ஓவியம் - வாய்ப்பை தவறவிடாதீர்!
சிவகங்கை சிறுவர்களுக்கு கலைத்திறன் போட்டி: குரலிசை, நடனம், ஓவியம் - வாய்ப்பை தவறவிடாதீர்!
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து சலுகைகளும் கிடைக்குமா?
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து சலுகைகளும் கிடைக்குமா?
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Vs ADMK-BJP: ''பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான், ராஜ்ஜியம் கிடைக்காது“; அதிமுக-பாஜக-வை வெளுத்த ஸ்டாலின்
''பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான், ராஜ்ஜியம் கிடைக்காது“; அதிமுக-பாஜக-வை வெளுத்த ஸ்டாலின்
Kanyakumari New Announcement : கன்னியாகுமரி மக்களுக்கு குஷி.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
கன்னியாகுமரி மக்களுக்கு குஷி.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Ramadoss election alliance : யாருடன் கூட்டணி.? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் சொன்ன முக்கிய அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது- பாமகவினருக்கு ராமதாஸ் சொன்ன முக்கிய அறிவிப்பு
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Top 10 News Headlines: ‘‘வெரைட்டி வடை சுடும் இபிஎஸ்“, இஸ்ரேல் சென்ற மோடி, அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல் - 11 மணி செய்திகள்
‘‘வெரைட்டி வடை சுடும் இபிஎஸ்“, இஸ்ரேல் சென்ற மோடி, அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல் - 11 மணி செய்திகள்
Rashmika-Vijay Net Worth: நாளை ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி; ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இவ்வளவா.?!
நாளை ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி; ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இவ்வளவா.?!
TN Weather Update: குளிருக்கு Bye Bye.! சுட்டெரிக்க ரெடியாயிடுச்சு சூரியன்; ரெடி ஆகுங்க; கோடை எப்போ தொடங்குது தெரியுமா.?
குளிருக்கு Bye Bye.! சுட்டெரிக்க ரெடியாயிடுச்சு சூரியன்; ரெடி ஆகுங்க; கோடை எப்போ தொடங்குது தெரியுமா.?
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
Embed widget