மேலும் அறிய

Anna University Convocation: அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி: ஆளுநருக்கு நினைவு பரிசை வழங்கிய அமைச்சர் பொன்முடி!

அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், 69 தங்கப் பதக்கம் உட்பட 3.66 லட்சம் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், 69 தங்கப் பதக்கம் உட்பட 3.66 லட்சம் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனத்துடன், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. எனினும் நீண்ட காலமாக அண்ணா பல்கலைகத்தின்  42-வது பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது

இந்நிலையில் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். 

Anna University Convocation: அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி: ஆளுநருக்கு நினைவு பரிசை வழங்கிய அமைச்சர் பொன்முடி!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார். 

அதைப் போலவே துணை வேந்தர் வேல்ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகியோரும் தங்களின் உரைகளை நிகழ்த்தினர். அதைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி இந்தப் பதக்கங்களை வழங்கினார். நிறைவாகப் பிரதமர் மோடி, பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். 

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அண்ணா பல்கலை வளாகக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் படிக்கும் 3.66 லட்சம் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்பை முடித்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
எம்.டி.எஸ். சீட் ஒதுக்கீடு வெளியானது - சென்டாக் அதிரடி அறிவிப்பு
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
TVK vs DMK:
TVK vs DMK: "பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி.." உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!
Vinayagar Chaturthi Holiday: மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
Embed widget