மேலும் அறிய

தனியார் கல்லூரியின் BC, MBC மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

தனியார் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கும் அரசு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப் பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011&ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850&லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350&லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850&லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.

 

அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப் படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார் கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

 

எடுத்துக்காட்டாக, 2022&23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை & அறிவியல் கல்லூரிகளில் 2023&24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025&26ஆம் ஆண்டில் 2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

 

அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026&27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Embed widget