மேலும் அறிய

Periyar University: பெரியார் பற்றி நூல் வெளியிட்டதற்கு நடவடிக்கையா? யாரின் கையாளாக செயல்படுகிறது பெரியார் பல்கலை?- ராமதாஸ்

பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? யாருடைய கையாளாக செயல்படுகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழக  நிர்வாகம் என்று பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தைப் பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றைத்  தொகுத்து ’’பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, அவர் பணியாற்றி வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இரா.சுப்பிரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ள இரா.சுப்பிரமணி, அப்பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் பெரியார் பல்கலைக்கழக பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குனராகவும் அவர் உள்ளார். பெரியார் இருக்கையின் நோக்கமே தந்தைப் பெரியாரின் சாதனைகளை பரப்புவதுதான். அந்த வகையில்தான் மக்கள் நலனுக்காகவும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவும் பெரியாரின் போராட்ட வரலாறுகளை அவர் தொகுதித்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு.

தந்தை பெரியாருக்கு எதிரானது

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பேராசிரியர் சுப்பிரமணிக்கு எதிரானது அல்ல... தந்தை பெரியாருக்கு எதிரானது.  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், அதன் பொறுப்பு பதிவாளர் தங்கவேல் ஆகியோர் பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினாவை எழுப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். இப்போது பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கத் துடிக்கின்றனர். பெரியார் பெயரிலான பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள்? என்ற ஐயம் எழுகிறது.

யார் காரணம்?

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகளுக்கு காரணம் தமிழக அரசின் செயலற்ற தன்மைதான். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கடந்த ஜனவரி 9-ஆம் நாள் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்த ஆணையம் அதற்கு வழங்கப்பட்ட இரு மாத காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தால், பல்கலைக்கழக துணைவேந்தரும், பதிவாளரும் தண்டிக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 11 மாதங்கள் முடிந்தும் விசாரணையை முடிக்காததால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்பட்ட துணிச்சல் தான் இத்தகைய செயல்களை செய்யத் தூண்டியுள்ளது. அந்த வகையில் இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 13 வகையான முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணையை விரைவுபடுத்தி, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
Embed widget