மேலும் அறிய

TN School Reservation: மெட்ரிக் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்.. உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு..

அனைத்துப் பள்ளிகளிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைக் கண்காணித்து, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மேல்நிலைப் பள்ளிகள்‌ அங்கீகாரம்‌ வழங்கும்‌ விதிகளில்‌, மேல்நிலைப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையின்‌போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள்‌ பாடப்பிரிவு வாரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023ஆம்‌ கல்வியாண்டிலும்‌ மேல்நிலைக்‌ கல்விக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌பொழுது, மாநிலத்தின்‌ அதிகார வரம்பிற்குள்‌ செயல்படும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளிலும்‌ (சிறுபான்மை கல்வி நிலையங்கள்‌ நீங்கலாக) பழங்குடியினர்‌, ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும்‌ விகிதத்தில்‌ கடைபிடிக்கப்பட
வேண்டும்‌.


TN School Reservation: மெட்ரிக் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்.. உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு..

மேற்கண்ட அட்டவணையில்‌ தெரிவித்துள்ளவாறு மாணவர்‌ சேர்க்கையின்போது பொதுப் பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல்‌ முதலில்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌. இதில்‌ மாணவர்கள்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும்‌, பொதுப்பிரிவினர்‌, ஆதி திராவிடர், பழங்குடியினர்‌, பிற்படுத்தப்பட்ட பிரிவினர்‌என்ற எவ்விதப் பாகுபாடின்றித் தயாரித்திடவும்‌ அறிவுறுத்தப்படுகிறது. அதன்‌ பின்னர்‌ அந்தந்தப் பிரிவுக்கான பட்டியல்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌.

மாநிலத்தின்‌ அதிகாரவரம்பிற்குள்‌ செயல்படும்‌ அனைத்து வகைப் பள்ளிகளிலும்‌ (சிறுபான்மை கல்வி நிலையங்கள்‌ நீங்கலாக) பாடப்‌ பிரிவு வாரியாக மேற்கூறப்பட்ட விகிதத்தில்‌ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெற வேண்டும்‌ என அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. 

அனைத்துப்‌ பள்ளிகளுக்கும்‌ இந்த செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம்‌ பெற்று தங்கள்‌ கோப்பில்‌ வைக்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மேலும்‌, மேற்கூறியவாறு அனைத்துப் பள்ளிகளிலும்‌ மாணவர்‌ சேர்க்கையை உறுதி செய்யுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்தபோதும் பெரும்பாலான பள்ளிகள், இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உணவு இடைவேளையிலும் அனுமதி இல்லை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
உணவு இடைவேளையிலும் அனுமதி இல்லை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget