மேலும் அறிய

2025-26 டிப்ளமோ மருத்துவப் படிப்பு விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ (DIP / DNT) மருத்துவ பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் நீட்டித்துள்ளது.

2025- 2026ஆம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

வேறு எந்த வழிக்கும் அனுமதி இல்லை

இந்த பட்டயப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.inwww.tnayushselection.org என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/ JPEG வடிவில் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்பு விவரங்கள்

படிப்புப் பிரிவு : DIP-மருந்தாளுநர் / DNT-செவிலியர், மருத்துவ பட்டயப்படிப்புகள்

படிப்பிற்கான காலம் : 2% ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2

கல்லூரிகளின் விவரங்கள்: அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகள்- 02.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 23.09.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க / வந்து சேர வேண்டும்.

அறிவிக்கை நாள் - 09.09.2025

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் - 09.09.2025

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் - 09.09.2025

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் - 05.10.2025 மாலை 5.00 மணி வரை

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் - 05.10.2025 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் செப்டம்பர் 23ஆம் தேதி மாலை 5.00 மணியாக இருந்தது. எனினும் அவகாசம் நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கட்டண விவரங்கள், பிற தகவல்களினை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnayushselection.org உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
"TET தேர்வு அறையில் கலெக்டர் ஸ்ரீகாந்த்: மயிலாடுதுறையில் இன்று நடந்தது என்ன?"
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget