அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம், மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், விடைத்தாள் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜி.எஸ்.டி பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 


 தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர்களிடம் ஒரு தாளுக்கு மறுமதிப்பீடு செய்ய 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, விசாரிக்க  விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை இன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 


மேலும் படிக்க : Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 741 பேருக்கு கொரோனா தொற்று; 13 பேர் உயிரிழப்பு!






அதன்படி, திருத்தங்கள், தொலைந்து போன சான்றிதழ்கள் திரும்ப பெறுதல், விடைத்தாள்களின் நகல் பெறுதல்,  பட்டம் அளிக்கும் சான்றிதழ் போன்ற  16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. அதேபோல், புரோவிஷனல் சான்றிதழ், தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், டிகிரி சான்றிதழ், ரேங்க் சான்றிதழ், மறு ஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


குறைகிறதா பெட்ரோல்... டீசல்...? கையிருப்பில் உள்ள பெட்ரோலை விடுவிக்க மத்திய அரசு முடிவு!


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


என்னது இவங்க மூன்று பேரும் சதம் அடிச்சு இவ்ளோ நாள் ஆச்சா..- எப்போது மீண்டும் சதம் அடிப்பார்கள்?


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


திண்டுக்கல் பாலியல் கல்லூரி தாளாளர்: போளூர் நீதிமன்றத்தில் சரண்!