Supplementary Exams: 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் - விவரம்!
10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 20ஆம் தேதி அன்று வெளியிட்டார்.
12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில், மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேரும், மாணவிகள் மொத்தம் 4 லட்சத்த 60 ஆயிரத்து 120 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபரும் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

தற்காலிகச் சான்றிதழ்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளது. 10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை துணைத் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு http://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























