மேலும் அறிய

‘குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் ’; பணம் கேட்டு மிரட்டிய பெங்களூரு இளைஞர் கைது

Kanchipuram: குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞர் கைது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
 
தொடர்ந்து வந்த மிரட்டல் அழைப்புகள்
 
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நெசவுத் தொழில் செய்து நடுத்தர வசதியுடன் இருக்கும் சுந்தரமூர்த்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
 
சிவகாஞ்சி காவல் நிலையம் - Sivakanchi Police Station
சிவகாஞ்சி காவல் நிலையம் - Sivakanchi Police Station
 
தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனை விளையாட்டாக நினைத்துக் கொண்ட சுந்தரமூர்த்தி செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மறுநாள் அதே நேரத்தில் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியின் இரு குழந்தைகளையும் கடத்தி கண்டம் துண்டமாக வெட்டி கொன்று விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்
 
காவல் நிலையத்தில் புகார் ( siva kanchi police station )
 
இதனால் பயந்து போன சுந்தரமூர்த்தி செல்போன் அழைப்பு மிரட்டல் குறித்து சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் உத்தரவின் பேரில் அதிரடியாக களமிறங்கிய சிவகாஞ்சி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்த செல்போன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர்
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர்
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன், தேடுதல் வேட்டை
 
சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அது கர்நாடக மாநிலம் பெங்களூருவை காட்டிய நிலையில், சிவகாஞ்சி போலீஸ்கார் அந்த பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் செல்போனில் மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபரான இளைஞரை கண்டுபிடித்தனர்.
 
பணம் பறிக்க நூதன முயற்சி
 
இளைஞரை கண்டு பிடித்து கைது செய்த நிலையில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் சபரிஷ் என்பதும், அவரின் குடும்பத்தினர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் தனது பண தேவைக்காக விளையாட்டாக , செல்போன் எண்ணில் உள்ள வாட்ஸ் அப் டிபி புகைப்படத்தை வைத்து செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
 
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
 
கைது செய்து சிறையில் அடைப்பு
 
இதனைத் தொடர்ந்து பெங்களூரு இளைஞரான சபரிஷை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்து இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சமுதாயத்தில் நல்ல படிப்பறிவுடன், உயர் பதவியில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்  செல்போனில் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
Embed widget