மேலும் அறிய
Advertisement
2014ல் மாயமான கணவர்... அப்பார்ட்மெண்ட்டில் வேறு பெண்ணுடன் தஞ்சம்... குழந்தையுடன் தர்ணா செய்த மனைவி!
கடந்த 7 ஆண்டுகளாக மனைவி ஜாய் தாசன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் விழுப்புரம் மாவட்டம் தனது தாய் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குண்டூர் சாலை செம்மண்டலம் கிராமத்தில் வசிக்கும் ஜாய் தாசன் வயது 34. கணவர் பால் தாசன் உடன் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு கணவன் காணவில்லை என்று சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக மனைவி ஜாய் தாசன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் விழுப்புரம் மாவட்டம் தனது தாய் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கணவன் பால் தாசன் திருமணமான சுவேதா என்ற மற்றொரு பெண்ணுடன் வசித்து வருவதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
அதை அறிந்த மனைவி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு இரண்டு பிள்ளைகளுடன் அமர்ந்து 3 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக கணவன் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எதுவா இருந்தாலும் கோர்ட்டில் சந்திப்போம் என்று அலட்சியமாக பதில் கூறி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் கணவன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் பிள்ளைகளுக்கு நியாயம் வழங்க வேண்டியும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்ணிடம், கேளம்பாக்கம் போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனு பெற்று கொண்டனர்.
புகார் மனுவில் கணவன் பல்வேறு பெண்களை கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion