விழுப்புரம் : கோட்டகுப்பம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வாலிபர் கைது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு சோதனைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவர் மீனவர் ஆவர். அவரது மகன் அசோக் என்கிற மணிமாறன். இவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.


Seeman : மீனவர்கள் கைது விஷயத்தில் தமிழ்நாடு அரசு எதுவும் செய்ய முடியாது- சீமான்



இவரது தங்கை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார். ரகுபதி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் போது அலையின் தாக்கத்தால் நிலை தடுமாறி திடீரென படகில் இருந்து விழுந்து விட்டார். எனவே அவர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு துணையாக அசோக்கின் தங்கை, தாய் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டில் அசோக் மட்டும் தனியாக இருந்தார்.


மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்: வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை!


Madurai Airport Issue: மாறி மாறி பதிலடி! மோதிக்கொண்ட சு.வெ., சிந்தியா!


அப்போது டியூசன் படிப்பதற்காக 4 மாணவிகள் வந்தனர். அவர்களை பார்த்த அசோக் நான் உங்களுக்கு டியூசன் எடுக்கிறேன் என்று கூறினார். அப்போது ஒரு மாணவியை மாடி பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அழுதபடி தனது தாயாரிடம் தெரிவித்தார்.


இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீனவர் அசோக் என்கிற மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுதிள்ளது.


மேலும் வாசிக்க: Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!


பிரபல ரவுடி பாம் ரவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் - பாஜக இளைஞரணி செயலாளர் கைது


Meendum Manjapai: அதிமுக வெள்ளைப் பை... திமுக மஞ்சப் பை... எப்போ தான் நெகிழிக்கு Bye...Bye!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: ஆர்டர் செய்தது சிக்கன் விங்ஸ்.. வந்தது தலை.. KFC-இல் நடந்த களேபரம்..