2021ம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் நாட்டின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இறுதியாக நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடர் 17 நாட்கள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் மாநிலங்களை உறுப்பினர்களில் மிகவும் குறைவான வருகைப்பதிவு கொண்ட உறுப்பினராக அ.தி.மு.க.வின் எம்.பி. சந்திரசேகரன் உள்ளார். அவர் 6 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி உள்ளார். அவர் 17 நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளார். அவர் 10 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
சந்திரசேகரன் (அ.தி.மு.க.)
- குளிர்கால கூட்டத்தொடர் 2021 – 38 சதவீதம் வருகை( 6 நாட்கள் வருகை)
- மழைக்கால கூட்டத்தொடர் 2021 – 88 சதவீத வருகை
- நிதிநிலை அறிக்கை 2021 - 52 சதவீத வருகை
2019ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த வருகை – 71 சதவீத வருகைப்பதிவு
ஆர்.எஸ்.பாரதி ( தி.மு.க.)
- குளிர்கால கூட்டத்தொடர் 2021 – 46 சதவீத வருகை ( 8 நாட்கள் வருகை)
- மழைக்கால கூட்டத்தொடர் 2021 – 94 சதவீத வருகை
- நிதிநிலை அறிக்கை 2021 - 26 சதவீத வருகை
2016ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்த வருகை – 68 சதவீதம் வருகைப்பதிவு
அன்புமணி ராமதாஸ் ( பா.ம.க.)
- குளிர்கால கூட்டத்தொடர் 2021 – 54 சதவீத வருகை
- மழைக்கால கூட்டத்தொடர் 2021 – 29 சதவீத வருகை
- பட்ஜெட் கூட்டத்தொடர் 2020 – 9 சதவீத வருகை
2019ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் மொத்த வருகை – 20 சதவீத வருகை
கடைசியாக கேள்வி எழுப்பியது – 30.07.2021 (மொரப்பூர் – தருமபுரி ரயில்வே பாதை குறித்து)
நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்தான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் குறைந்த வருகைப்பதிவை கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்