விழுப்புரம்: நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்கக்கூறி தாட்கோ அலுவகத்தில் பெண் அதிகாரிக்கு மிரட்டல்
விழுப்புரம் தாட்கோ அலுவகத்தில் வி.சி.கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அத்துமீறி உள்ளே நுழைந்து தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்ததாக பெண் காவல் நிலையத்தில் அதிகாரி புகார்
விழுப்புரம் தாட்கோ அலுவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து தகாத வார்த்தையால் பேசியதோடு மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தாட்கோ பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் தாட்கோ அலுவகத்தில் செயற்பொறியாளராக அன்புதேவகுமாரி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு செயற்பொறியாளர் அன்புதேவகுமாரியிடம் நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்க கூறி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரியிடம் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என புகார் அளித்துள்ளார்
நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்க கோரி விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக விசிக மாவட்ட செயலாளர் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் பெண் அதிகாரி புகார்.#villupuram pic.twitter.com/f63BG1GqOJ
— SIVARANJITH (@Sivaranjithsiva) May 18, 2022
பின்னர் ஆத்திரமடைந்த சேரன் பெண் அதிகாரியை தகாத வார்த்தையால் பேசியதோடு மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். இந்த விடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் தாட்கோ பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்க சொல்லி மிரட்டல் விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதாக தெரித்தார் அந்த அதிகாரி.
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்