விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுமையை வன்கொடுமை செய்த கொடூரன் கைது
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே பள்ளி மாணவியை கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்புனர்வு செய்த கொடூரன் கைது...
விழுப்புரம்: சிறுவந்தாடு அருகே எட்டாம் வகுப்பு மாணவியை கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி அதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை சிறுவன் கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது கரும்பு தோட்டத்திற்கு வந்த மணிகண்டன் என்ற இளைஞர் சிறுவனை கரும்பால் அடித்துவிட்டு பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பரசுரெட்டிப்பாளையத்தை சார்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தபட்டது. இதனையடுத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுவனை அடித்துவிட்டு பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள போது அந்த சிறுமி "வேண்டாம் என்னை விட்டு விடுங்கள்" எனவும் "அம்மா என்ன தேடுவாங்க" என கதறி அழும் சிறுமியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.