பழங்குடி பெண்ணை கொடூர கொலை... செஞ்சியில் தொடரும் கொலை சம்பவம்
ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம்: செஞ்சி அருகே மது போதையில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொலை செய்த இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட முருகன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் (25). பழங்குடியினரான தங்கராஜ் சூலையில் கூலி வேலைக்கு செய்து வருகிறார். இவருக்கும் செவலபுரை கிராமத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்த நிலையில், மூன்று ஆண் பிள்ளைகளுடன் வசித்து வந்த சின்னப்பொண்ணு(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஓராண்டுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் முருகன்தாங்கல் பகுதியில் வசித்து சூலையில் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு முருகன் தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள குளக்கரையில் தங்கராஜ் மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தன் மனைவி சின்னப்பொண்ணிடம் தகறாறு செய்து உள்ளார். இதானால் இருவருக்கும் கைகலப்பு ஏற்றப்பட்டு ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் தங்கராஜ் தலையிலும் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து சின்னப்பொண்ணு சடலத்தை வீட்டிற்கு கொண்டுவந்து வைத்துவிட்டு தங்கராஜ் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் செஞ்சி டி.எஸ்.பி கார்த்திகபிரியா மற்றும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று சின்னப்பொண்ணு சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த இரண்டாவது கணவர் தங்கராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியின பெண்ணை இரண்டாவது கணவர் மது போதையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

