மேலும் அறிய

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

’’விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பியோடியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்துக்கு தீ வைத்தனர்’’

விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு அரவிந்த் நகரை சேர்ந்தவர் சேகர் மகன் அர்ஜூனன் (28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று அர்ஜூணன், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார். அவர் அடுத்த வாரம் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தார். அர்ஜூனன், விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்தில் இருந்து மணிமேகலை தெருவுக்கு சவாரி சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்துக்கு புறப்பட்டார்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்திற்கு அருகில் இரவு 8.20 மணியளவில் அவரது ஆட்டோ செல்ல முயன்ற போது அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறி அர்ஜூனன் கீழே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவரது மீது ஏறியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் தனியார் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

இதையறிந்ததும் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். விபத்தில் அர்ஜூணன் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். அர்ஜூணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் தனியார் பஸ் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்றும், பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதை அறிந்ததும் ஆத்திரமடைந்த அர்ஜூனனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அந்த தனியார் பஸ்சின் மீது கல்வீசி தாக்கியும், உருட்டுக்கட்டையாலும் அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளும் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அதோடு ஆத்திரம் தீராத அவர்கள், பஸ்சிற்குள் சென்று பின்பக்க இருக்கைகளில் பெட்ரோலை ஊற்றி பஸ்சுக்கு தீ வைத்து கொளுத்தினர். இதில் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் பின்பக்க பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

பின்னர் விபத்தில் பலியான அர்ஜூணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அதற்கு அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அர்ஜூணனின் உடலை நடுரோட்டிலேயே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு

உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதை கேட்டறிந்த போலீசார், விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன் பிறகு இரவு 9.15 மணியளவில் அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அர்ஜூனனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த தனியார் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget