Video : மாமனாரை ஓங்கி பளாரென அறையும் பெண் போலீஸ்… வேடிக்கை பார்க்கும் காவலர்.. பரபரப்பு வீடியோ..
அந்த பெண் போலீஸ்காரருக்கும் அவரது தாயாருக்கும் முதியவருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. பெண் போலீஸ்காரர் தனது மாமனாரை பலமுறை அறைந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது வயதான மாமனாரை அவரது தாய் மற்றும் மற்றொரு போலீஸ்காரர் முன்னிலையில் அறைந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
வைரலாகும் வீடியோக்கள்
பெரும்பாலான இடங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், நம் மக்கள் அனைவரது கையில் மொபைல் போனும், அதில் கேமராவும் வந்துவிட்ட நிலையில், எது நடந்தாலும் அது படம்பிடிக்கப்பட்டு வெளியாகி விடுகுறது. சமயங்களில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோன்ற ஒரு விடியோ சமூக வலைதளங்களில் பரவி காவல்துறை கவனத்திற்கு சென்று விசாரணை வரை சென்றுள்ளது.
பதிவான காட்சிகள்
உடனிருந்த போலீஸ்காரர் பிரச்சனையில் தலையிடுவதற்கு முன்பு பெண் போலீஸ்காரர் தனது மாமனாரை மாறி மாறி அறைந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. தாக்குதலுக்கு முன், அந்த பெண்ணுக்கும் அவரது தாயாருக்கும் போலீஸ்காரர் முன் முதியவருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது வீடியோவில் தெரிகிறது.
தாயாரும் உடந்தையா?
லக்ஷ்மி நகரில் உள்ள முதியவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. உணர்ச்சிவசப்பட்ட பெண் தனது மாமனாரை மாறி மாறி அறைந்ததால் உடல் ரீதியான தாக்குதலாக மாறியது. தாக்குதலுக்கு அவரது தாயாரும் உடந்தையாக இருப்பது போல விடியோவில் தெரிந்தது.
#WATCH | Case registered under section 323/427 IPC after a video of Sub-Inspector thrashing her in-laws in Delhi's Laxmi Nagar went viral. Info shared with concerned authority to take suitable departmental action against the erring police official: Delhi Police
— ANI (@ANI) September 5, 2022
(CCTV Visuals) pic.twitter.com/VUiyjVtZQl
துறை ரீதியான நடவடிக்கை
குற்றம் சாட்டப்பட்டவர், டிஃபென்ஸ் காலனி காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு, அவரது மாமியாருக்கு எதிராக நீதிமன்றப் போராட்டத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், வேண்டுமென காயப்படுத்தியது உட்பட தொடர்புடைய பிரிவுகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்