Crime: வரதட்சணை கொடுமை.. மனைவியின் மூக்கை கடித்து காயப்படுத்திய கொடூரம்.. என்று முடியும் இந்த அவலம்?
உத்தரப்பிரதேசம் மாநிலம் மகேஷ்பூர் பகுதியில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அஜ்மி என்ற பெண் கசிபி கஞ்ச் காவல்துறையில் தன் கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்தார்.
வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மகேஷ்பூர் பகுதியில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அஜ்மி என்ற 22 வயது பெண் கசிபி கஞ்ச் காவல்துறையில் தன் கணவர் குடும்பத்தினர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘மாமனார் உட்பட தன் கணவர் குடும்பத்தினர் 6 பேர் தன்னை வரதட்சணை கேட்டு கேட்டு துன்புறுத்தினர்’ என தெரிவித்திருந்தார்.
மேலும், ‘தனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தற்போது 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வரதட்சணை கொடுக்கவில்லை என கூறி என தனது மாமியார் அடித்தார். அதுமட்டுமல்லாமல் தனது கணவர் நாஜிம் மூக்கை கடித்து காயப்படுத்தினார்’ எனவும் தெரிவித்திருந்தார். மேலும் வரதட்சணை கொடுக்காததால் தனது கணவர் பலமுறை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், அப்படி பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஊர் பஞ்சாயத்து சமரசம் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அஜ்மி கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனைவியின் குரலைக் கேட்டு தற்கொலை செய்த நபர்
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அவரது மனைவி சஞ்சனா யாதவ்விற்கும் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சஞ்சனா தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து மனைவியை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் சுதாகரால் முடியவில்லை. இதனால் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். உடனே சஞ்சனாவுக்கு போன் செய்து கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் தூக்குப்போடும் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். இதனால் பதறிப்போன சஞ்சனா பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து என்னவென்று பார்க்குமாறு சொல்லியுள்ளார், உடனடியாக சென்ற அவர் கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதாகர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விஷ்ணு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)