நடிகை மீனா போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்! ரகசிய கும்பல் பின்னணி, போலீஸ் அதிரடி வேட்டை
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலிடம் பயிற்சி பெற்ற நபர் ஒருவர் தான் எங்களை வழி நடத்தி வருகிறார். பத்து பேரின் கை மாறி தான் எங்களுக்கு போதைப் பொருள் வந்து சேரும்.

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்
சென்னை ராயப்பேட்டை மணிக் கூண்டு அருகே வணிக வளாகத்தையொட்டி பெண் ஒருவர் மெத்ஆம் பெட்டமைன் போதை பொருள் விற்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு நடத்தி கடந்தாண்டு நவம்பரில் 5 கிராம் மெத்ஆம் பெட்டமைனுடன் மீனா ( வயது 27 ) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் சேலம் இலங்கை முகாமை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
ஆர்யா நடித்த டெடி திரைப்படம்
மேலும் இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி உள்ளிட்ட படங்களிலும் சுந்தரி என்ற 'டிவி' சீரியலிலும் நடித்து இருப்பது தெரிய வந்தது. இவருக்கு பின்னணியில் போதை பொருள் கும்பலை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் செயல்படுவது தெரிய வந்தது. இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். இரு தினங்களுக்கு முன் சரவணராஜீ என்பவரும் சிக்கினார். இவர் அளித்த வாக்கு மூலத்தில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலிடம் பயிற்சி பெற்ற நபர் ஒருவர் தான் எங்களை வழி நடத்தி வருகிறார். பத்து பேரின் கை மாறி தான் எங்களுக்கு போதைப் பொருள் வந்து சேரும்.
ரூபாய் நோட்டில் உள்ள எண் - அடையாளம்
ஆனால் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இருக்காது. ரூபாய் நோட்டில் உள்ள எண் எங்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த நோட்டை காண்பிக்கும் நபரிடம் பொருள் வாங்கிக் கொள்வோம் என இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த முக்கிய நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது ;
மீனாவின் மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அவரின் எஸ்தர் என்ற உண்மையான பெயரில் தான் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இவரின் நெட் ஒர்க் முழுவதும் ஆய்வு செய்ததில் தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் சிக்குவர் என தெரிவித்தனர்.





















