மேலும் அறிய

பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் அத்துமீறல் செய்த வாலிபர்கள் போக்சோவில் கைது

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் சிறுமிகளிடம் பேசினர். அப்போது தங்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்த சிறுமிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் அரசு பள்ளிக்கு வந்த சகோதரிகள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததன் பின்னணியில் மனதை உறைய செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்கள் பள்ளிக்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பள்ளி ஆசிரியர்கள் இரு மாணவிகளையும் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மாணவிகளை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பதுதான்.

உடன் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிகள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் சிறுமிகளிடம் பேசினர். அப்போது தங்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்த சிறுமிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதாவது முசிறி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் அஜித் (20), கொத்தனாராக கூலி வேலை பார்த்து வரும் கேசவன் (23) ஆகியோர் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதுதான் மாணவிகள் பாதிப்புக்கு காரணம் என்பது விசாரணை மூலம் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அஜித், கேசவன் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். முசிறி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவிகள், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget