மேலும் அறிய

திருவாரூரில் காந்தி சிலை உடைப்பு விவகாரம்: 3 இளைஞர்கள் கைது

தீபாவளி அன்று இரவு நண்பர்கள் 8 பேர் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தி உள்ளனர் அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது மது போதையில் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலையை அடித்து உடைத்துள்ளனர்

திருவாரூரில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை உடைப்பு விவகாரத்தில் மூன்று இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். தப்பி ஓடிய ஐந்து இளைஞர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வடகண்டம் சீவெளி பாலவை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தற்பொழுது 112 மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மழையின் காரணமாகவும் அடுத்த நான்கு நாட்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி விடுமுறை முடிந்த பிறகு இன்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன இந்த நிலையில் எப்பொழுதும் போல் வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தூய்மை செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் இன்று காலை பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.


திருவாரூரில் காந்தி சிலை உடைப்பு விவகாரம்: 3 இளைஞர்கள் கைது

அப்பொழுது வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்து கொண்டிருக்கும் பொழுது மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பதை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரிஜாவிற்கு தூய்மை பணியாளர்கள் மகாத்மா காந்தியின் முழு திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை ஆசிரியர் கிரிஜா மகாத்மா காந்தி சிலை சேதப்பட்டு இருப்பதை நேரடியாக பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த பள்ளியில் மகாத்மா காந்தியின் முழு திருவுருவ சிலை என்பது அமைக்கப்பட்டுள்ளது தற்பொழுது இந்த சிலையை சேதப்படுத்தியது யார் என்பதை குறித்து குடவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தீபாவளி அன்று இரவு நண்பர்கள் 8 பேர் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தி உள்ளனர் அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது மது போதையில் பள்ளியில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடித்து உடைத்துள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.


திருவாரூரில் காந்தி சிலை உடைப்பு விவகாரம்: 3 இளைஞர்கள் கைது

அதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாலவை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அரவிந்த் மற்றும் ஆகாஷ் வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்த தேவசிவா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய ஐந்து நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக வடகண்டம் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வடகண்டம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை உடைத்து அங்குள்ள சிலிண்டர் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்கள், மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைக்க முயற்சி செய்துள்ளார்கள் தொடர்ந்து வடகண்டம் பகுதியில் அதிகளவில் திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி சிலை உடைப்பு விவகாரத்தில் உடனடியாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தது போல் அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடை உடைப்பு விவாகரத்து ஈடுபட்ட குற்றவாளிகளையும் விரைவாக காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வடகண்டம் கிராம மக்கள் மாவட்ட காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Trump Vs Canada: ‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
Embed widget