பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
திருப்பூரில் கல்லூரி மாணவனை 12ம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் அம்பலம்.

திருப்பூர் ஏபிடி சாலையில் இந்திரா நகர் புளியமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் ஸ்ரீஹரி(20). இவர் தனியார் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஸ்ரீஹரியை 16 வயது சிறுவன் வெளியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்ரீஹரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கல்லூரி மாணவன் கொலை
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றார். இதனையடுத்து அவரிடம் தப்பிக்க முயன்ற ஸ்ரீஹரியை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் அலறிய படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: IndiGo flight Fire: நடுவானில் பறந்த விமானத்தில் தீ! அலறி கூச்சலிட்ட 200 பயணிகள்! இறுதியில் நடந்தது என்ன?
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கேவிஆர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயங்களை சேரித்த பிறகு ஸ்ரீஹரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் தன்னை தேடி வந்துவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி கழற்றி வீசி சென்றிருந்த டி-ஷர்ட்டை கைப்பற்றினர்.
அதிர்ச்சி தகவல்
இதனிடையே ஸ்ரீஹரியின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்து பேசிக் கொண்டிருந்தது தென்னம்பாளையத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அதாவது ஸ்ரீஹரி முன்பு படித்த பள்ளியின் ஜூனியர் மாணவர். இதனையடுத்து சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
12ம் வகுப்பு பள்ளி மாணவன்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீஹரி தன்னிடம் இருந்த செல்போன் ஒன்றை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்ரீஹரியிடம் இருந்து காசு கொடுத்து ஒரு செல்போனை சிறுவன் வாங்கியுள்ளான். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே அந்த செல்போன் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் செல்போனை ஸ்ரீஹரியிடம் கொடுத்து பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். மேலும் அவரை செல்போன் எண்ணை பிளாக் செய்ததாக கூறப்படுகிறது.
செல்போன் பிரச்சனை
இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த சிறுவன் மார்க்கெட்டுக்கு சென்று கத்தி வாங்கியுள்ளார். இதை துணியில் சுற்றி எடுத்து வந்துள்ளார். பணத்தை வாங்குவதற்காக ஸ்ரீஹரி வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுவனிடம் பணம் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆத்திரம் தீர சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























