11ஆம் வகுப்பு சிறுமி 6 மாத கர்ப்பம் - எலி மருந்து சாப்பிட்ட நிலையில் போலீஸ் விசாரணை
’’சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை’’
திருவண்ணாமலையை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 16 வயதுடைய சிறுமி, இவர் சென்னை கோவளம் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டிற்கு தொலைபேசி மூலம் அழைத்து தனது உடல் நிலை சரியில்லாமல் உள்ளதால் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் சென்னை சென்று சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த எலிமருந்தினை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2.5 டன் கெட்டுப்போன வெல்லம் - திரும்பி எடுத்துச்செல்ல உத்தரவிட்ட ஆட்சியர்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவர் உட்பட 3 பேர் கைது
அப்போது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது, அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பாமாக இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வெளியில் வந்த மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் சென்று சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது மயக்கநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவண்ணாமலையில் மான் கொம்பு வைத்திருந்த திமுக பிரமுகர் கைது - உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி மருந்து சாப்பிட்டதால் சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- லாக் டவுன் கட்டுப்பாடுகளால் மூட் அவுட்- அயன்பட பாணியில் புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய நபர் கைது
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் 044 - 24640050, 28352345.