மேலும் அறிய

11ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

’’பேசும் திறன் இன்னும் மாணவிக்கு வரவில்லை. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் ஹரிபிரசாத் என மாணவி எழுதி காண்பித்துள்ளார்’’

திருவண்ணாமலையை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள்  16 வயதுடைய சிறுமி, இவர் சென்னை கோளவளம் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி  11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டிற்கு தொலைபேசி மூலம் அழைத்து தனது உடல் நிலை சரியில்லாமல் உள்ளதால் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் சென்னை சென்று சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

11ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

அப்போது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது, அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பாமாக இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வெளியில் வந்த மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் சென்று சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது மயக்கநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன் பெயரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி மற்றும் காவலர்கள் அந்த மாணவி பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று, மாணவியின் வருகை பதிவேடு, மாணவியை பெற்றோர் எப்போது அழைத்து சென்றனர், மாணவியின் நடத்தை குறித்து தலைமையாசிரியர், விடுதி வார்டன் மற்றும் ஆசிரியர்களிடம்  விசாரணை நடத்தினர். இருந்தாலும் மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாமல் இருந்து வந்தது. 

11ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

இந்நிலையில், தீவிரசிகிச்சைக்கு பிறகு தற்போது அந்த மாணவிக்கு நினைவு திரும்பத் தொடங்கியது. ஆனாலும் பேசும் திறன் இன்னும் மாணவிக்கு வரவில்லை. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் ஹரிபிரசாத் என மாணவி எழுதிக் காண்பித்துள்ளார். அந்த பெயரை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் வயது (31) என்பவர் மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் காதல் திருமணம் செய்துகொண்டு, திருவண்ணாமலை கரியான் செட்டி தெருவில் வசித்து வருகிறார். அப்போது, இந்த மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து  நேற்று இரவு காவல்துறையினர் ஹரிபிரசாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Embed widget