Crime News: ஆள் அழகா இருக்கானே.. 3 மாத கர்பம்! கண்ணை மறைத்த கள்ளக்காதல்... கொலையில் முடிந்த துயரம்
“கணவனை விட பவன்குமார் அழகாக உள்ளார்” என்று நினைத்த சத்யா, அவரிடம் நெருங்கத் தொடங்கினார். காலப்போக்கில் இது கள்ளக்காதலாக மாறியது.

மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞரை, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருமணம் தாண்டிய உறவு:
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அகரகரம் பகுதியில் மிக்சர் கம்பெனி நடத்தி வந்தார். அவரின் மனைவி சத்யா (30) மீது அதே நிறுவனத்தில் வேலை செய்த பவன்குமார் (20) என்பவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
அந்த நிறுவனத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தவர் அதே பகுதியை சேர்ந்த பவன்குமார் (20) மற்றும் அவரது தம்பி சந்தோஷ்குமார் (17). பவன்குமார் வேலை செய்வதில் சுறுசுறுப்பாக இருந்ததால், விரைவில் நிறுவன உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்றார்.
ஆனால், “கணவனை விட பவன்குமார் அழகாக உள்ளார்” என்று நினைத்த சத்யா, அவரிடம் நெருங்கத் தொடங்கினார். காலப்போக்கில் இது கள்ளக்காதலாக மாறியது.
இந்த நடத்தை குறித்து கம்பெனியில் வேலை செய்த சிலர் அல்போன்ஸிடம் புகார் கூறினர். அதிர்ச்சியடைந்த அல்போன்ஸ் மனைவியை எச்சரித்தார். ஆனால் சத்யா, “அவன் எனக்கு தம்பி மாதிரி” என்று மறுத்தார். இறுதியில், சந்தேகத்தின் பேரில் அல்போன்ஸ், பவன்குமாரையும் பின்னர் சந்தோஷ்குமாரையும் வேலையிலிருந்து நீக்கினார்.
இதற்கிடையில், சத்யா கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அல்போன்ஸ் போலீசில் புகார் அளித்ததில், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
ஆனால், பவன்குமார் தொடர்ந்து சத்யாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கேட்க, அல்போன்ஸ் சந்தேகத்தில் சிக்கினார். அதிர்ச்சியடைந்த அவர், மனைவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் சத்யா மீண்டும் காணாமல் போனார்.
முதலில் ஓடிப்போன மனைவி கண்டுபிடிக்கலாம் என்று 3 மாத கர்ப்பிணியை கண்டுபிடிக்க காவல் நிலைய உதவியோடு தலைமறைவாக இருந்த சத்யாவை கண்டுபிடித்து வீட்டில் விட்டுவிட்டு அதே கோபத்தோடு திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு அடுத்த மரிமாணிக்குப்பம், தோட்டிக்குட்டை கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் அடைக்கலமாக இருந்த பவன்குமாரை தேடிச் சென்றுள்ளார்.
கொலை திட்டம்
“என் குடும்பத்தையே சீரழிக்கிறான்” என்ற கோபத்தில் அல்போன்ஸ், தனது நண்பர்கள் பாக்யராஜ் (36), பாலா (37), கதிர்வேல் (39) ஆகியோருடன் சேர்ந்து பவன்குமாரை தேட திட்டமிட்டார்.
அப்போது பவன்குமார் தன் பாட்டி வீட்டில் (திருப்பத்தூர் மாவட்டம், தோட்டிக்குட்டை) மறைந்து இருந்தார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு சென்றதால், அவரது தம்பி சந்தோஷ்குமாரை அல்போன்ஸ் குழு கடத்திச் சென்றது. அவரை அடித்து, பவன்குமாரின் இருப்பிடத்தை கேட்டு துன்புறுத்தியதாக தகவல்.
கத்தியால் குத்திய கணவன்
இறுதியில், பவன்குமார் பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அல்போன்ஸ் சென்று, வெளியே வருமாறு கேட்டார். பவன்குமார் மறுத்துவிட்டதால், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதுகிலும் காலிலும் குத்தினார்.
காயமடைந்த பவன்குமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு மாற்றியபோது, நுரையீரல் பகுதியில் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
நால்வர் கைது
இந்நிலையில் அல்போன்ஸ் மற்றும் அவரது கூட்டத்தினர் சுசுகி எஸ்-கிராஸ் காரில் தப்பிச் சென்றனர். குரிசிலாப்பட்டு போலீசார் டிஎஸ்பி சௌமியா தலைமையில் விசாரணை நடத்தியதில், பெங்களூருவில் பதுங்கியிருந்த அல்போன்ஸையும் அவரது குழுவினரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அல்போன்ஸ்,“என் மனைவியுடன் பவன்குமார் கள்ளக்காதலில் ஈடுபட்டான். கர்ப்பமாக இருந்த சத்யாவையும் தொந்தரவு செய்தான். ஆத்திரத்தில் குத்தினேன். கொலை செய்யும் நோக்கம் இல்லை”என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.
சிறையில் அடைப்பு
பின்னர் அல்போன்ஸ் உட்பட நால்வரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் ஒரு குடும்பமே பாதிப்புக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.






















