பல இடங்களில் கொள்ளை! 6 நாட்களில் தட்டி தூக்கிய காவல்துறை - வழுக்கி விழுந்த கொள்ளையர்களுக்கு மாவுக்கட்டு...!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவரை தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவரை தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சுமார் 7 லட்சம் ரூபாய் கொள்ளை
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலச்சாலை கிராமம் சீர்காழி- நாகப்பட்டினம் பிரதான சாலையில் இந்தியன் வங்கியும் அதன் ஏ.டி.எம் இயந்திரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 5-ம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் அந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்து 6 லட்சத்து 8 ஆயிரத்து 600 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதனை அடுத்து இந்த கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர் அசோக்குமார் என்பவர் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார், இளையராஜா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: அப்போ தளபதி 69 அந்த படத்தோட ரீமேக் தானா ? உண்மையை சொன்ன விடிவி கணேஷ்
தனிப்பட்ட போலீசார்
தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த சூழலில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், சிறப்பு தனி படை காவல் உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார், இளையராஜா ஆகியோர் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த இருவரை நிறுத்தி சோதனை ஈடுபட்டனர்.
சிக்கிய கொள்ளையர்கள்
அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்கள் இருவரையும் வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். பையில் கட்டு கட்டாக பணம் இருப்பதைக் கண்ட போலீஸார் இருவரிடமும் தீவிர விசாரணை செய்ததில், அவர்கள் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த 22 வயதான வில்பர்ட் ராஜ், இதே போல் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான விக்னேஷ் என்பது தெரியவந்தது.
மாவுக்கட்டு ஆளான கொள்ளையர்கள்
அதனை அடுத்து அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் மீது வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இருவரும் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் கை எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

