தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என்று கூறியிருந்தார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை KVN நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படம் துவங்கியதிலிருந்தே, பகவந் கேசரி திரைப்படத்தின் ரீமேக் தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தளபதி 69-ல் பகவந் கேசரி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை படமாக்கியதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் பகவந் கேசரி திரைப்படத்தை 5 முறை பார்த்து, அதை ரீமேக் செய்ய அனில் ரவிபுடியிடம் கேட்டாராம்.
ரீமேக் படத்தை இயக்க முடியாது என்று அந்த வாய்ப்பை அனில் ரவிபுடி நிராகரித்துள்ளார் என்று வி.டி.வி கணேஷ் புரமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு அனில் ரவிபுடி கூறியது அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருந்தது.
தளபதி 69 பகவந் கேசரி ரீமேக் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. அப்படத்தை இயக்க முடியாமல் போனதற்கு நேரம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தளபதி 69 திரைப்படத்திற்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.