மேலும் அறிய

Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டி பகுதியில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கொலை செய்து நாடகமாடிய மகனும் , தாயையும் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி 55 வயதான இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி (48). இவர்களுக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும், காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் திருமணம் முடிந்து, வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

12 PM Headlines: நண்பகல் 12 மணி தலைப்புச்செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்னென்ன..?


Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மது போதைக்கு அடிமையான முனியாண்டி குடும்ப பிரச்சினை தொடர்பாக தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிதாஸ் விடுமுறைக்காக ஜி.உசிலம்பட்டிக்கு வந்திருந்தார்.

crime: தோட்டத்தில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை - நத்தம் அருகே பரபரப்பு

நேற்று முன்தினம் இரவு முனியாண்டி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த முருகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த காளிதாஸ், தனது தந்தை முனியாண்டியை கண்டித்தார். அப்போது முனியாண்டி, காளிதாசை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

"கொசு தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வேதனை


Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரியும், காளிதாசும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் ஆபத்து என நினைத்து கொலையை மறைக்க முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவு 12 மணி அளவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது முனியாண்டியின் உடலை தங்களது வீட்டின் முன்பு சாலையில் போட்டனர். சிறிது நேரத்தில் தாயும், மகனும் அபயகுரல் எழுப்பினர்.

முனியாண்டியை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை இங்கு வந்து போட்டுவிட்டதாக கூறி கதறி அழுதனர். இதனை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Rajinikanth Watch ARR Movie: இயக்குநர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ஆர்.. படத்தை கண்டு ரசித்த ரஜினிகாந்த்!


Crime: மதுபோதையில் தந்தை தகராறு; கொலை செய்து நாடகமாடிய தாய், மகன் - சிக்கியது எப்படி..?

 

மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், முனியாண்டியை கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவரது மனைவி மற்றும் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முருகேஸ்வரி, காளிதாசை கண்டமனூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் முனியாண்டியை கொலை செய்துவிட்டு, அவரை மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடியதை தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து, காளிதாஸ் மற்றும் அவரது தாய் முருகேஸ்வரியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Embed widget