மேலும் அறிய

மயிலாடுதுறை: தொடர்ந்து குடிபோதையில் தகராறு: காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!

மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகள் 28 வயதான ரம்யா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது  அங்கு  அவருடன் பணிபுரிந்த திருநெல்வேலி வள்ளியூர் கூத்தங்குடி பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் 36 வயதான மகன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை: தொடர்ந்து குடிபோதையில் தகராறு: காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!

அதனை தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  இந்நிலையில் குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குமார் பட்ட கடனை ரம்யா மயிலாடுதுறை  சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடைத்து  வந்துள்ளார். 

மயிலாடுதுறை: தொடர்ந்து குடிபோதையில் தகராறு: காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!

Cobra Movie First Review: வெளியான கோப்ரா ரிவியூ! விக்ரமுக்கு இது மைல்கல்! புகழ்ந்துதள்ளிய முக்கிய நபர்!

இந்த சூழலில் நேற்றிரவு இரவு குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை: தொடர்ந்து குடிபோதையில் தகராறு: காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!

Mikhail Gorbachev : பனிப்போருக்கு முடிவு.. மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம்...யார் இந்த மிக்கைல் கோர்பசேவ்?

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடர்ந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பல்வேறு பட்ட மக்களும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து செவி சாய்க்காது, மது விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மது விற்பனையால் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்கி பெரு விபத்துக்களை ஏற்படுத்தி பல உயிர்களை காவு வாங்கி வருவதாகவும், அதுமட்டுமின்றி மதுபோதையில் ஏற்படும் பிரச்சினையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும், இதுபோன்று கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படும்போது அதில் ஏற்படும் விளைவால் பல பெண்கள், குழந்தைகள் என பலரது வாழ்க்கை பாழாகி வருவது தமிழகத்தில் தொடர்ந்து வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரசு மதுபான கடைகளில் வரும் வருவாய்க்கு மாற்று வழி செய்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Crime : அதிர்ச்சி...குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட நான்கு பெண்கள் மரணம்...நடந்தது என்ன?

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget