மேலும் அறிய

சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை பிரித்து பணம், பொருட்கள் திருட்டு - தஞ்சையில் மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சையில் சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை பிரித்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சையில் சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை பிரித்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரை சேர்ந்தவர் கமேஷ் (22). இவர் தஞ்சை புதிய ஸ்டாண்ட் அருகே ஆர்.ஆர். நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து சூப்பர் மார்க்கெட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது. மேலும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் கமேஷ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இருவேறு இடங்களில் பைக்குகள் திருட்டு

தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் 2 பைக்குகள் திருடப்பட்டது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (72). ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. சம்பவத்தன்று இவர் தன்னுடைய பைக்கை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.

இதுகுறித்து புண்ணியமூர்த்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
இதேபோல் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திக் (19)  என்பவர் தனது நண்பர்களுடன் நெய்வாய்க்கால் பகுதிக்கு தனது பைக்கில் சென்றார். பின்னர் குளித்து விட்டு திரும்பிய போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார்த்திக், தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Varunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?
Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?
Ajith Viral Video : அஜித்திடம் பாட்டு பாடிய அஜித்.. இது செம்மையா இருக்கே.. வைரலாகும் வீடியோ..
Ajith Viral Video : அஜித்திடம் பாட்டு பாடிய அஜித்.. இது செம்மையா இருக்கே.. வைரலாகும் வீடியோ..
பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்த ராஜமெளலி...வசமாக சிக்கிய மகேஷ் பாபு
பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்த ராஜமெளலி...வசமாக சிக்கிய மகேஷ் பாபு
Embed widget