![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: தென்காசி அருகே அரை நிர்வாணத்தில் மூதாட்டி உடல் மீட்பு - 72 வயது முதியவரின் கொடூரச் செயல்
பாவூர்சத்திரம் அருகே 72 வயது முதியவர் 65 வயது மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
![Crime: தென்காசி அருகே அரை நிர்வாணத்தில் மூதாட்டி உடல் மீட்பு - 72 வயது முதியவரின் கொடூரச் செயல் Tenkasi crime Half-naked old woman recovered near Tenkasi - TNN Crime: தென்காசி அருகே அரை நிர்வாணத்தில் மூதாட்டி உடல் மீட்பு - 72 வயது முதியவரின் கொடூரச் செயல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/e671b355dd20bb108d986224e7e98df31707102040238571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது திப்பணம்பட்டி கிராமம். இங்குள்ள பழனி ஆண்டவர் கோவிலின் பின்புறம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் அரை நிர்வாணத்துடன் இறந்து கிடப்பதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நேரில் சென்று பார்த்த பொழுது அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 65) எனும் மூதாட்டி தனது சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்ததால் தனது மகன் ராமருடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள கிராமமான ஆவுடையானூரில் ராமர் மனைவியுடன் குடும்பம் வசித்து வந்துள்ளார். மூதாட்டி மட்டும் தனது சிறிய ஓட்டு வீட்டில் இருந்த பொழுது மகன் அவ்வப்போது வந்து தாயை பார்த்துவிட்டு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூதாட்டி முப்புடாதி பீடி சுற்றி தனது காலத்தை கழித்து வந்துள்ளார்.. மேலும் ஓட்டு வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் மாட்டுச்சாணம் கொட்டும் பகுதிக்கு சென்று தனது உபாதைகளை கழித்து வந்த நிலையில் தான் அவர் அரை நிர்வாணத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் மூதாட்டி கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கலாம்? அதோடு அரை நிர்வாணத்தோடு இருந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு இறந்தாரா? எனவும் விசாரணையை தொடங்கினர்.
அதன்படி காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியில் தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (வயது 72) என்னும் முதியவர் மூதாட்டியை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் கொலை செய்ததற்கான அதிர்ச்சி தகவலாக போலீசார் கூறும் பொழுது, முதியவர் ராமரின் மனைவி ஏற்கனவே இறந்த நிலையில் தனது இரு குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று மூதாட்டி கழிப்பிடத்திற்கு செல்லும் போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் ராமர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதாகவும் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அது முற்றவே கொலையில் முடிந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முதியவர் ராமரை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாவூர்சத்திரம் அருகே 72 வயது முதியவர் 65 வயது மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதில் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)