மேலும் அறிய
Advertisement
நோய் குணப்படுத்துவதாக கூறி பெண்ணை கொடூரமாக துன்புறுத்திய மந்திரவாதி - அதிர்ச்சி காட்சிகள்
பெண் துர் மந்திரவாதி நோய் குணப்படுத்துவதாக கூறி மேலும் ஒரு பெண்ணை கொடூரமாக துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பத்தனம் திட்ட மாவட்டத்தில் சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அந்த பெண் துர் மந்திரவாதி நோய் குணப்படுத்துவதாக கூறி மேலும் ஒரு பெண்ணை கொடூரமாக துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் 2 பெண்களை நரபலி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் பத்தனம் திட்ட மாவட்டத்தில் மலையாலப்புழா என்ற இடத்தில் வீட்டில் சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய வாசந்திமடம் என்ற வீட்டில் உள்ள சோபனா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் அறிந்து அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர். இந்த வீட்டில் இது போன்ற மந்திரவாதம் நடைபெறுவதாகவும் அதில் சிறுவர்களை ஈடுபடுத்தி வருவதாகவும் ஏற்கனவே பல புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் ஒரு சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும் அப்போது அந்த சிறுவன் மயங்கி விழும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல்துறை சோபனா என்ற அந்த பெண்ணை கைது செய்து அட்டகுளங்கர சிறையில் அடைத்தனர். மேலும் அந்த மடத்தை போலீசார் சீல் வைத்து மூடினர்.
இந்நிலையில், வாசந்தி மடத்தில் மந்திரவாத பூஜை என்ற பேரில் அரங்கேறிய மூடி நம்பிக்கையின் கொடூர சம்பவத்தின் மேலும் ஒரு வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மந்திரவாதம் மூலம் குணப்படுத்துவதாக கூறி சோபனா என்ற பெண் மந்திரவாதி நோய் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் நெஞ்சில் ஏறி நின்று காலால் மிதித்தும் கம்பால் அடித்தும், தலை முடியை பிடித்து இழுத்தும் அட்டகாசமான சத்தம் போட்டும் மற்றும் பல சைகைகள் காட்டி கொடூரமாக துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion