மேலும் அறிய

Fake FB account: வீரப்பனைப் பிடித்தவருக்கே விபூதி அடிக்கப் பார்த்த கும்பல் - விஜயகுமார் ஐ.பி.எஸ். பெயரில் போலிக் கணக்கு!

போலிக்கணக்குகளால் பதம் பார்க்கப்படும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் தற்போது அடுத்த டார்கெட்டாகி உள்ளார் விஜயகுமார் ஐ.பி.எஸ்.,. இதுகுறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை செய்திருந்தார் அவர்.

பேஸ்புக்கில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயரில் போலிக் கணக்குகள் தொடர்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் ஆணையர் தினகரன், ஏ.டி.ஜி.பி., ரவி, ஐ.ஜி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட பல முக்கிய ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயரிலேயே போலி பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன.  இதைச் செய்தது வெளிமாநிலத்தைச் சேர்ந்த கும்பல். போலிக்கணக்குகள் மூலம் அவர்கள் பணமோசடியில் ஈடுபட்டனர்.  போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி அவர்களின்  நட்புப் பட்டியலில் உள்ள நபர்களிடம் இன்பாக்ஸில் பணம் பறிப்பதுதான் இவர்களது பாணி. அவசரத் தேவையாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறிய சிறிய தொகை கேட்டு இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது.  

இப்படிப் போலிக்கணக்குகளால் பதம் பார்க்கப்படும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் தற்போது அடுத்த டார்கெட்டாகி உள்ளார் விஜயகுமார் ஐ.பி.எஸ்.,. இதுகுறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை செய்திருந்தார் அவர். இதையடுத்து, வீரப்பனைப் பிடித்தவரையே விட்டுவைக்கவில்லையா இந்த மோசடிக் கும்பல் எனக் கொதித்துள்ளனர் மக்கள்.

யாரிந்த மோசடி கும்பல்?

இந்தப் போலிக்கணக்குப் பணமோசடி கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊர்விட்டு ஊர் சென்று இந்த மோசடிப் பேர்வழிகளைப் பிடிக்க முடியாத சூழல் இருந்தது. எனினும் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு ராஜஸ்தானைச் சேர்ந்த ரவீந்திரநாத், ஷாகில் மற்றும் முஷ்டாக் ஆகிய மூவரைக் கைது செய்தது தமிழ்நாடு காவல். 

பக்காவாக உருவாக்கப்பட்ட போலிக்கணக்குகள், எப்படி? 

வி.ஐ.பி. நபர்களைத் தொடர்ந்து நோட்டம் விடுவது. அவர்களது புகைப்படங்கள் தகவல்களைத் திருடுவது. அவர்கள் பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்கி அதிலிருந்து அனைத்து நண்பர்களுக்கு ரிக்வஸ்ட் அனுப்புவது. அழைப்பை ஏற்றுக்கொண்ட நபர்களிடம் இன்பாக்ஸில் அவசரத் தேவை என நம்பவைத்துப் பணம் அனுப்பச் சொல்வது. சில பிரபல நபர்களின் பேஸ்புக் அக்கவுண்டை ஹேக் செய்ததுத்ம் தெரியவந்துள்ளது. 

இதனைத் தொழில்நுட்ப ரீதியாகச் செய்யாமல் செல்போன் எண்களைப் பயன்படுத்தி ஹாக் செய்துள்ளனர். பிடிபட்ட மூவருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. அதனால் கூகுள் ட்ராண்ஸ்லேட்டே கதியென அதன் மொழிபெயர்ப்பு உதவியுடன் உரையாடி வந்துள்ளனர்.  தமிழ்நாடு மட்டுமல்லாது தெலுங்கு தேசத்திலும் தனது கைவரிசையைக் காட்டியிருந்தது இந்தக் கும்பல்.  மோசடியில் ஈடுபட்டவர்கள் பிடிபட்ட நிலையிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதானப் போலிக்கணக்குத் தாக்குதல் தொடர்வது காவல்துறையைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், பலர் ஏமாறும் முன் இந்த விவகாரத்தை அரசு பேஸ்புக் நிறுவனத்திடம் கொண்டு சென்று, போலிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Also Read: சரத்பவாரின் மூன்றாவது அணி கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget