மேலும் அறிய
Advertisement
‛வந்தாய் ஐயா... வந்தாய் ஐயா... வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா’ சிவசங்கரை பார்த்து கதறிய பக்தர்கள்!
Siva Shankar Baba: உணர்ச்சிப் பெருக்கில் சிவசங்கர் பாபாவின் பெண் ஆதரவாளர் ஒருவர், நீதிமன்ற வாசலில் மண்டியிட்டு கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா(Siva Shankar Baba) மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. மேலும் தனக்கு ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதே காரணத்தை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நேற்று ,வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
சிவசங்கர் பாபா மீது இருக்கும் மூன்று போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்த காரணத்தினால், மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவசங்கர் பாபா நீதிமன்றம் வருகைபுரிந்த காரணத்தினால், சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வாசலில் குவிந்தனர். சிவசங்கர் பாபா ஆதரவாளர்களை கண்டவுடன், உற்சாகத்தில் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார். இதனை கண்ட சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள், பாபா வாழ்க என கூச்சலிட்டனர். சிவசங்கர் பாபா விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் பாபாவின் மீது திட்டமிட்டு பொய் வழக்குப்போட்டு உள்ளதாக கூச்சலிட்டனர்.
மேலும் சிவசங்கர் பாபாவிற்கு இதய நோய் உள்ளது, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறினர். உணர்ச்சிப் பெருக்கில் சிவசங்கர் பாபா ஆதரவாளர் ஒருவர், நீதிமன்ற வாசலில், மண்டியிட்டு கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார். பாகுபலி படத்தில் பிரபாஸ் அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டதும், அவருக்காக நாட்டு மக்கள் அழுவதைப் போன்ற காட்சியாக அது இருந்தது. இதனைத் தொடர்ந்து , காவல்துறையினர் சிவசங்கர் பாபா ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion