மேலும் அறிய

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

’’ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து,  மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக, மதுக்கூர் தாலுகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (52) பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி, கடந்த 17 ஆம் தேதி தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, ஹால் சூப்பர்வைசராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து, காலால் சீண்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகார் குறித்து, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா மாணவியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் ராஜ்குமார்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்
இதையடுத்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா,  தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூர் சிறையில் ஆசிரியர் ராஜ்குமார் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது,  சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள், ஆசிரியர் ராஜ்குமாருக்கு ஆதரவாக, பள்ளி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள், ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து,  மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.   சில மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

இதனால் மதுக்கூர் - மன்னார்குடி இடையே போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் மறியலில் ஈடுபட்ட  மாணவிகளிடம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ், போலீஸ் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்

அப்போது ஆசிரியர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரியும், மீண்டும் அதே ஆசிரியர் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை கேட்டுக் கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை  எடுப்பதாக தெரிவித்தார். அதனையடுத்து மாணவிகள்  கலைந்து சென்றனர். மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மதுக்கூர் - மன்னார்குடி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Embed widget