13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதிப்பு
போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரம் காட்டு கொட்டாயில் வசிப்பவர் சாமுவேல். இவரது 13 வயது மகள் ராஜலட்சுமியை அதே பகுதியை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர ஓட்டுனர் தினேஷ் குமார் (30) என்பவர் சிறுமியின் வீட்டிற்கு அருகில் குடியிருந்து வருகிறார். ராஜலட்சுமி பூக்கட்டும் நூல் கேட்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க வந்த சிறுமியின் தாயாரை கீழே தள்ளி விட்டு சிறுமியின் கழுத்தை அரிவாளால் அறுத்து தினேஷ் குமார் படு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடி தனது மனைவி மற்றும் தம்பியுடன் ஆத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். இதுகுறித்து சிறுமியின் தாயார் சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறையினர் தினேஷ் குமார் மீது போக்சோ, கொலை வழக்கு, தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது இந்நிலையில் நேற்று தினேஷ்குமார் குற்றவாளி என நேற்று உறுதி செய்த நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தினேஷ் குமார் கண்ணீருடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்தார். ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சேலம் போக்சோ நீதிமன்றத்தில் முதல் மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், இந்த தீர்ப்பின் மூலம் தவறு செய்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படும். இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளில் விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளியான தினேஷ் குமாருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு போக்சோ வழக்கு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை என்பதால் SC ST Act பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஒரு ஆயுள் தண்டனை அது முடிந்த பின்னர் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அபராதமாக ரூபாய் 25 ஆயிரம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது குறித்து குழந்தையின் பெற்றோர்கள் கூறுகையில், தனது மகளை கண் முன்னே கொலை செய்தபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின. இனிமேல் இதுபோன்று எந்த பெற்றோர்களுக்கும் துயரம் ஏற்படக்கூடாது அதேபோன்று எந்த பெண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை நடைபெற கூடாது என்பதற்காக என் மகளை கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். தற்பொழுது மரண தண்டனை வழங்கியுள்ளது என்னைப்போன்ற பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம் என்றும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.