மேலும் அறிய

Crime: தற்கொலை செய்ய நினைத்த அண்ணன்...சயனைடு கலந்த மதுவை குடித்த தம்பி; பறிபோன நண்பனின் உயிர்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் அண்ணன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

சேலம் மாநகர முள்ளுவாடி கேட் மகான் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். வெள்ளி தொழிலாளி. இவர் தம்பி சதாம் உசேன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது அண்ணன் வீட்டின் பீரோவுக்கு அடியில் இருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த அசேன் என்பவருடன் முள்ளுவாடி கேட்டில் உள்ள மதுபான பாருக்கு வந்துள்ளார். அங்கு சதாம் உசேன் அந்த மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் இரண்டு பேரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை அருகில் மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் இருவரையும் தூக்கி பார்த்தபோது வாயில் இருந்து நுரையும் ரத்தமும் வந்துள்ளது. உடனடியாக இருவரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்ததில் சயனைடு கலந்த மதுவை குடித்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அசேன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் உதவி கமிஷனர் வெங்கடேஷ், எஸ்ஐ கோகிலா தலைமையிலான சேலம் டவுன் காவல்துறையினர் டாஸ்மாக் பாருக்கு சென்று விசாரித்தனர். 

Crime: தற்கொலை செய்ய நினைத்த அண்ணன்...சயனைடு கலந்த மதுவை குடித்த தம்பி; பறிபோன நண்பனின் உயிர்

அப்போது அவர்கள் இருவரும் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கவில்லை என்பது உறுதியானது. பின்னர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் சதாம் உசேனின் அண்ணன் ஜாகிர் உசேனுக்கு கடந்த புதன்கிழமை அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஜாகிர் உசேன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து அருகில் இருந்த மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி வந்து வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு கலந்து வைத்துள்ளார். அந்த நேரத்தில் இன்னும் இரண்டு நாளில் சில வேலைகளை செய்து முடித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து, அந்த சயனைடு கலந்த குவாட்டர் பாட்டிலை பீரோவுக்கு அடியில் வைத்துள்ளார். அந்த மது பாட்டிலை தான் சதாம் உசேன் எடுத்துக் கொண்டு வந்து தனது நண்பர் அசேனுடன் சேர்ந்து குடித்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சதாம் உசேன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
Embed widget