மேலும் அறிய
Advertisement
ஓடும் மின்சார ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: போலீஸை சிறைக்கு அனுப்பிய ரயில்வே போலீஸ்
" நான் போலீஸ் தான் உன்னால் என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணிக்கொள் என்று பெண்ணிடம் சவால் விடுத்துள்ளார் "
ரயிலில் பெண் ஒருவரிடம் ஆபாச செயலில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆண் ஒருவர் திடீரென ஆபாச செயல்
சென்னை ( Chennai News ) : சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபிலா என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14- ஆம் தேதி அன்று கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார்.
பண்ணிக்கொள் என்று பெண்ணிடம் சவால்
அதை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சி அடைந்து தனது செல்போனில் அவரது செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் அவரிடம் சண்டையிட்டுள்ளார். ஒருக்கட்டத்தில் அந்த நபருக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நான் போலீஸ் தான் உன்னால் என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணிக்கொள் என்று பெண்ணிடம் சவால் விடுத்துள்ளார். பின்னர் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே அந்த ஆசாமி பாதியில் ரயிலில் இருந்து தப்பி குதித்து சென்றுள்ளார்.
ஆதாரத்துடன் புகார்
இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே போலீசாரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்ததோடு அந்த வீடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார். இந்த புகாரில் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் வீடியோக்களை சரி பார்த்ததில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர். பின்னர் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
விளையாட்டு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion