மேலும் அறிய

Crime : "ஐ லவ் யூங்க..” : சோஷியல் மீடியா காதல்.. சிங்கப்பூர் பெண்ணிடம் இருந்து 72 லட்சம் கறந்த காதலன்.. கறார் தண்டனை..

முதல் திருமணத்தை மறைத்து சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி காதலித்து 2-வது திருமணம் செய்த வழக்கில், வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

முதல் திருமணத்தை மறைத்து சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி காதலித்து 2வது திரும ணம் செய்த வழக்கில், வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சிங்கப்பூரை சேர்ந்தவர் 40 வயதான ஆரோக்கியமேரி. இவருக்கு சமூக வலைதளம் மூலமாக புதுக்கோட்டை வசந்தபுரி நகரை சேர்ந்த 37 வயதான கணேசன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும், கடந்த 2010ல் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்த ஆரோக்கியமேரிக்கு கணவரின் திருமண ஏற்பாடு குறித்த விவரம் தெரியவந்தது. அப்போது அவர் விசாரித்ததில் சோலை கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்திருந்ததும், அந்த திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததும் தெரிந்தது. மேலும் தற்போது 3-வது திருமணத்திற்கு முயன்று வருவதும் தெரியவந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் 2018ல் ஆரோக்கியமேரி, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது. இதை மறைத்து, தன்னை 2வதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ. 72 லட்சம் பெற்றுக் கொண்டதோடு, மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்கிறார். மூன்றாவதாக 17வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, குற்றவாளியான கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 2.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதற்கு உடந்தையாக இருந்த கணேசனின் தாய் ராஜம்மாளுக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1.90 லட்சம் அபராதமும், சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும் ரூ.1.50 லட்சம் அபராதமும், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 1.60 லட்சம் அபராதமும், உறவினர் நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1.90 லட்சம் அபராதமும் விதித்து, 4 பேரும் தங்களது சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget