“உன்னை நான் நிர்வாணமாக பார்க்க வேண்டும்”; மோசடி கும்பலிடம் சிக்கிய ஐடி ஊழியர் - என்ன நடந்தது?
செல்போனில் ஆபாசமாக பேசி வலையில் சிக்க வைத்து பணம் பறித்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்: கோட்டக்குப்பத்தில் செல்போனில் ஆபாசமாக பேசி வலையில் சிக்க வைத்து பணம் பறித்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கனூர் அருகேயுள்ள கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஐ டி ஊழியர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் ஆபாசமாக பேசி வலையில் சிக்க வைத்துள்ளார். இதனை நம்பிய இளைஞரும் இளம்பெண்ணும் கோட்டக்குப்பம் அருகேயுள்ள பெரிய முதலியார் சாவடி பீச்சில் இயங்கி வரும் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது இளம்பெண் இளைஞரை நிர்வாணமாக பாக்க வேண்டுமென ஆசையாக கேட்டதால் ஐடி ஊழியர் நிர்வாணமாக அறைக்குள் நின்றுள்ளார். அப்போது அறையினுள் திடீரென உள்ளே நுழைந்த ஒரு கும்பல் எங்கள் உறவினர் பெண்ணையே நீ அழைத்துக் கொண்டு வந்து விட்டாயா என கூறி இளைஞரை அரை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அவரது கழுத்தில் வைத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது இளம்பெண்ணும் அந்தகும்பலும் சேர்ந்து தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை அறிந்து கொண்ட ஐடி ஊழியர் நீங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடுவதாகவும் பணம் வீட்டில் உள்ளது வீட்டுக்குச் சென்று பணம் தருகிறேன் என்று கூறவே, அந்த கும்பல் இளைஞரிடம் இருந்த விலையுயர்ந்த செல்போன் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு, அவர்கள் வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் ஐடி ஊழியரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்ற ஐ டி ஊழியர் தனது நண்பர்கள் மூலமாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே இதனை அறிந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்த ஜெர்மின் ஆல்வின் என்பவர் மூலம் பணப்பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காலாப்பட்டினை சார்ந்த சுகன், திருநாவுக்கரசு பிரசாத், சுனில் ஆகியவை நான்கு பேரை கைது செய்த கோட்டக்குப்பம் போலீசார் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஜெர்மின் ஆல்வின் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

