மேலும் அறிய

சாட்டை துரைமுருகன் மீது ஒன்றல்ல... இரண்டல்ல... எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: திருவள்ளூர் போலீசார் அறிக்கை இதோ!

மாவட்ட ஆட்சியரின் உத்திரவை மீறி ஒரு பெரிய கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் ஆதாரமற்ற அவதூறு பரப்பி அரசுக்கெதிராகவும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் பணியாளர்களை தூண்டிவிட்டுள்ளார்.

அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன்(saattai duraimurugan) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது பதிவு செய்த வழக்குகள் குறித்து திருவள்ளூர் காவல்துறையினர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட குறிப்பு...

சாட்டை துரைமுருகன் மீது ஒன்றல்ல... இரண்டல்ல... எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: திருவள்ளூர் போலீசார் அறிக்கை இதோ!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் செயல்பட்டுவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் vFoxcann தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 16678 பெண் தொழிவாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 2745 பேர் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமீள் கொரட்டூரில் உள்ள International Maritime Academy கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன் இந்த விடுதியில் உணவு சாப்பிட்ட 256 பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 97 பணியாளர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக விடுதிக்கு திரும்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 159 பணியாளர்களில் 155 பேர் அடுத்த இரண்டு நாட்களில் டிஎப்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது நான்கு பணியாளர்கள் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்களது உடல்நிலையும் தற்போது முன்னேறி வருவதால் அவர்களும் ஒரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாட்டை துரைமுருகன் மீது ஒன்றல்ல... இரண்டல்ல... எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: திருவள்ளூர் போலீசார் அறிக்கை இதோ!

சிகிச்சை பெற்று வந்த பணியாளர்களில் சிலர் இறந்துவிட்டதாகவும் அதைப்பற்றி நிர்வாகம் தங்களிடையே மறைப்பதாகவும் வதந்தி பரவியதால் விடுதியில் தங்கியிருந்த பணியாளர்கள் கடந்த 16.12.2021 அன்று திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் TH ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அவர்களிடையே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும் எந்த ஒரு உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை என உண்மை நிலைமையை எடுத்துக்கூறி விடுதி வளாகத்தில் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டார். மேலும் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு குறித்து திருவள்ளூர் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் குழு விசாரனை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒரு பத்திரிக்கை செய்தியையும் வெளியிட்டு ஆதாரமற்ற வதந்தி பரப்புவேர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுசம்பந்தமாக தரமற்ற உணவுப்பொருட்களை பணியாளர்களுக்கு வழங்கியதற்காக விடுதியில் உணவு விடுதி நடத்தி வரும் 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கல்லூரி வளாகத்தில் முறையான அனுமதியின்றி பணியாளர்களை வாடகைக்கு அனுமதித்த கல்லூரி உரிமையாளர் மற்றும் முதல்வர் மீது தனியே மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 17.12.2021 இரவு சுமார் 23.00 மணியளவில் சுமார் 2000 பெண் பணியாளர்கள் சுங்குவார் சத்திரம் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து உண்மை நிலைமையை விளக்கி கூறி சிகிச்சையிலிருந்த பெண் பணியாளர்களை வீடியோ காலில் தொடர்பு கொண்ட பிறகே பணியாளர்கள் போராட்டத்னத கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடக்குப்பட்டு பகுதியில் மறியலில் ஈடுப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வேறு வழியில்லாமல் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பணியாளர்களின் மேற்படி சாலை மறியலால் பல மணி நேரம் சாவை போக்குவரத்து ஸ்ப்தம்பித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சாட்டை துரைமுருகன் மீது ஒன்றல்ல... இரண்டல்ல... எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: திருவள்ளூர் போலீசார் அறிக்கை இதோ!

இதனிடையே தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சாட்டை முருகன் எனும் யூடியுபர் தமது டிவிட்டரில் "தரமற்ற உணவு சாப்பிட்ட 4 பெண்கள் பலியாகி உள்ளனர்" என்று ஒரு பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அவர் மீண்டும் வெளியிட்ட ஒரு பதிவில், சிகிச்சை பெற்று வந்த பணியாளர்களில் மொத்தம் 9 பெண்கள் உயிரிழந்ததாகவும் அவர்கள் மரணத்தை கம்பெனி நிர்வாகமும் அரசாங்கமும் கோவிட் மரணங்கள் என தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு பதிவு செய்தார். மேற்படி வீடியோ மற்றும் டிவிட்டர் பதிவுகள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையேயும் பணியாளர்களிடையேயும் பீதியையும் குழப்பத்தையும் உருவாக்கியது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மேற்படி வீடியோ பதிவுகளை திரும்ப திரும்ப பார்த்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த பதிவுகள் காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்திலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாக வழிகோலியது. இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் உத்திரவை மீறி ஒரு பெரிய கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் ஆதாரமற்ற அவதூறு பரப்பி அரசுக்கெதிராகவும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் பணியாளர்களை தூண்டிவிட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டம் தொடர காரணமாக இருந்து பதற்றமான சூழ்நிலையை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்த யூடியுபர் சாட்டை முருகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் பூந்தமல்லி தாசில்தார் திரு.சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருவள்ளுர் தாலுக்கா காவல்நிலைய குற்ற எண். 631/2021 U/s.153, 153 A, 269, 504, 505 (i)(b), 509, 124 A உருவாக்கி IPC. T/w.Section 3 of ED Act & sec. 54 of DM Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி சாட்டை முருகன் நேற்று (19.12.2021) இரவு கைது செய்யப்பட்டு திருவள்ளூர் நீதித்துறை நடுவரிடம் ஆஜர் செய்யப்பட்டு 03.01.2021 வரை திருவள்ளூர் கிளைச்சிறையில் நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget