மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
வண்டலூர்: பெட்ரோல் பங்கில் கொள்ளை; அம்மா மீது சத்தியம் செய்த திருடர்கள்: ஆனாலும் காட்டிக்கொடுத்த சிசிடிவி
வண்டலூர் அடுத்த முடிச்சூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த சிறார் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த முடிச்சூர் சர்வீஸ் சாலை லட்சுமி நகரில் முன்னாள் திமுக தலைவர் தாமோதரன், நயாரா (NAYARA) என்ற பெட்ரோல் பங்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை பெட்ரோல் பங்கிற்க்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அங்கு இருந்த வயதான காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி 50,000 ரொக்க பணம் மற்றும் விலையுர்ந்த செல்போனை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்,
சம்பவம் குறித்து பீர்கன்காரனை போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதை அடுத்து பெட்ரோல் பங்கில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இரும்பு கம்பியுடன் வரும் மர்ம நபர்கள் கல்லாபெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவானதை அடுத்த வியாசர்பாடியை சேர்ந்த மதன் (21), சென்ட்ரலை சேர்ந்த லட்சுமனன் (18) மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த 17 வயது சிறாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு செல்பொன், மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் ,சீறாரை சிறுவர் சீர் திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
கைதான மதன் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் சிறையிலிருந்து அவர் வெளியில் வந்திருக்கிறார். கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு ஹோட்டலில் அறை எடுத்த மூன்று பேரும் மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர். பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது அது திருவள்ளூரில் திருடப்பட்டது என காவல்துறையினர் கண்டறிந்தனர் , செல்போன் சிக்னலைவைத்து இளைஞர்கள் மாமல்லபுரத்தில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரித்தபோது, அம்மா சத்தியமாக நாங்கள் திருடவில்லை வெறும் நான்காயிரம் ரூபாய் மட்டுமே திருடினார்கள் என தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையிலேயே அவர்கள் பணம் திருடியதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது காவல்துறையினரிடம் தாங்கள் மாற்றிக்கொண்டது தெரிந்த பிறகும், மிக புத்திசாலித்தனமாக தாங்கள் திருடவில்லை என சத்தியம் செய்து கூறினார்கள். மேலும் சிறுவன் ஒருவன் இருப்பதால் அவனின் வாழ்க்கை வீணாக கூடாது என்பதற்காக ஆதாரத்துடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் ஆதாரங்களை தேடும் போதுதான் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது அதன் அடிப்படையில் தற்போது அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் எனத் தெரிவித்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion