மேலும் அறிய

Crime : 100 பேர்.. கோடிகளில் மோசடி.. ஓலா ஸ்கூட்டி விற்பனையில் கைவரிசை.. 16 பேர் கைது

ஓலா ஸ்கூட்டியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. போலி இணையதளம் மூலம் 1000 பேரை ஏமாற்றியுள்ளது இந்த கும்பல் இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓலா ஸ்கூட்டியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. போலி இணையதளம் மூலம் 1000 பேரை ஏமாற்றியுள்ளது இந்த கும்பல் இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஹரியானாவின் குருகிராம், பிஹாரின் பாட்னாவை சேர்ந்தவர்கள்  என்று டெல்லி சைபர் க்ரைம் துணை ஆணையர் (வடக்கு) தேவேஷ் மாஹ்லா தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஆன்லைனில் ஓலா ஸ்கூட்டி புக் செய்து பணத்தை இழந்த நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நாங்கள் தேடுதல் வேட்டையை தொடர்ந்தோம். அதன்படி மோசடி கும்பலை நாங்கள் பிடித்தோம் என்றார்.

பெங்களூருவை சேர்ந்த இருவர் போலி இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அந்த இணையதளத்தில் ஸ்கூட்டி புக் செய்ய விரும்புபவர்கள் பதிவு செய்தவுடன் அவர்கள் முழு விவரத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் ஸ்கூட்டிக்காக ரூ 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அந்த நபரின் அழைப்புகளை ஏற்பதே இல்லை. இப்படித்தான் 1000 பேருக்கும் மேல் இந்த கும்பலிடம் ஏமாந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 114 சிம் கார்டுகள், 60 மொபைல் ஃபோன்கள், 7 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இந்த மோசடிக்காக 25 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளனர் என்றார்.

இந்திய சந்தையில் ஓலா ஸ்கூட்டர் 
 
பவிஷ் அகர்வாலின் ஓலா எலக்ட்ரிக் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது ஓலாவின் மாடலான S1 டிசைனின் குறைந்த விலை வடிவமைப்பாக இருக்கும். ஆதாரங்களின்படி, புதிய ஸ்கூட்டர் ரூ. 80,000 க்கும் குறைவாக சந்தைக்கு  வருகிறது, இது நாட்டின் மிகவும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும் இ-ஸ்கூட்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்கூட்டரின் செயல்பாடுகள் S1 மாடல் போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நிறுவனத்தின் MoveOS மென்பொருளை இந்த மாடலும் தொடர்ந்து பயன்படுத்தும்.

கடந்த ஆண்டு, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் s1 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.99,999க்கு (எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்களில் தொடக்க விலையில்) அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்புகளான Ola S1 மற்றும் S1 Pro, மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டர்களாக நிலைநிறுத்தப்பட்டு, இசைக்கோர்ப்பு, மேப்பிங், யூசர் சப்போர்ட் மற்றும் ரிவர்ஸ் யூஸேஜ் போன்ற மிகவும் பிரபலமான MoveOS அம்சங்களை உள்ளடக்கி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு சார்ஜில் 500 கிமீ ஓட்டும் திறன் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலா ஒரு நாளைக்கு 1,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதாகக் கூறுகிறது, இருப்பினும், சாஃப்ட்பேங்க் ஆதரவுடன் இயங்கும் ஓலா எலக்ட்ரிக்கால் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் சில வாங்குபவர்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வேகத்தை எட்டியுள்ளது, ஆனால் ஓரிரு தீ விபத்துகள் இந்த வகை வாகனங்களை வாங்குபவர்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. ஓலாவின் பிரபலமான கருப்பு நிற S1 ப்ரோ ஸ்கூட்டர் ஒன்று புனேவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் அண்மையில் பெரிய அளவில் தீ விபத்துக்குள்ளானது மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது

பெரும்பாலான மக்கள் இன்னும் நெரிசலான இந்திய சாலைகளில் பெட்ரோல் விலை கட்டுப்படி ஆகவில்லை என்றாலும் வேறு வழியில்லாத காரணத்தால் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கின்றனர். இந்த இக்கட்டை மாற்றும் ஆயுதமாக மின்சார ஸ்கூட்டர்கள் பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget